Header Ads

பிக்பாஸ் ஓவியாவுக்கு காத்திருந்த லக்!! இப்படி ஒரு பட்டமா ? நம்பவே முடியல

பிக்பாஸ் வீட்டில் ஒரே ஒரு மாதம் மட்டுமே இருந்த ஓவியா, இன்று உலகப்புகழ் பெற்றுவிட்டார். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறிய ஓவியா, திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது. 


இந்த நிலையில் ஓவியாவின் திடீர் புகழ் காரணமாக அவர் நடித்த பழைய மலையாள திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் பிரத்விராஜ், ஓவியா நடித்த 'மனுஷ்யமிருகம்' என்ற மலையாள திரைப்படம் 'போலீஸ் ராஜ்ஜியம்' என்ற பெயரில் தமிழில் வெளிவரவுள்ளது. 


இந்த படத்தின் பாடல்கள் நாளை இணையதளங்களில் வெளியாகவுள்ளதாகவும், இம்மாதம் இந்தப் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விளம்பர போஸ்டரில் ஓவியாவுக்கு 'பிக் ஸ்டார்' என்ற பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.