M1 மோட்டர்வேயில் இறந்த இந்தியரகள்: அவர்களது ட்ரீம் ஹாலிடே ஐரொப்பா செல்வது தான் என்கிறார்கள்
வாழ்நாளில் எப்படி என்றாலும் ஐரோப்பா சென்று, சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற கனவோடு இந்திய குடும்பம் ஒன்று லண்டன் கிளம்பி வந்துள்ளார்கள். அவர்களது மகள் பிரான்சில் உள்ள டிஸ்னி லேன்ட் பார்பதே தனது கனவாக இது நாள் வரை இருந்தது என்று கூறியுள்ளார். ஆனால் அவர்களை அனைவரையும் 1 செக்கனில் ஒருவர் கொன்றுவிட்டார். கடுமையான மது போதையில் , FEDEX என்னும் பார்சல் சர்விஸ் லாரியை ஓட்டி வந்த , ஓட்டுனர் , தனக்கு முன்னால் ஒரு மினி பஸ் நிற்பதை அவதானிக்காமல் அதன் மேல் மோதியுள்ளார்.
இதனால் 11 பேரை ஏற்றிக்கொண்டு யூரோ ஸ்டர் ரயில் மூலமாக ஐரோப்பா செல்லவிருந்த , மினி பஸ் ஓட்டுனர் உட்பட 11 பேரும் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். நேற்று முன் தினம் நடந்த இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட 11 பேரில், பல இந்தியர்கள் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதேவேளை நசுங்கிப் போன மினி பஸ்சில் இருந்து இந்தியக் குழந்தை ஒன்றை பொலிசார் உடனே மீட்டு எடுத்தார்கள். அக் குழந்தை அப்போது உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. ஆனால் சற்று நேரத்தில் அக்குழந்தை உயிர் இழந்துவிட்டது என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். கொல்லப்பட்ட இந்தியர்கள் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்து, அவர்களது உறவினர்களோடு பிரிட்டன் பொலிசார் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அவர்கள் கேரளாவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.



No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்