400 ஆண்களின் ஆண் குறிகளை வெட்டி எறியச் சொன்ன ரவுடி சாமியார்: கண்டுகொள்ளாத மாநில அரசு !
சண்டிகர்: 36 பேரை படுகொலை செய்த ஒரு வன்முறை கும்பலின் தலைவனாகிய சாமியார் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப், ஹரியானா அரசுகள் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சாமியார் ஒரு பெண்ணை கற்பழித்துள்ளார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு அவர் மரபணு(டி.என்.ஏ) பரிசோதனைக்கு உள்ளாகிய பின்னர். அவரே அதற்கு காரணம் என்று நீதிமன்றில் நிரூபனமாகியுள்ளது. இதனை அடுத்து அவருக்கு தண்டனை வழங்கப்பட இருந்த நிலையில், பெரும் கலவரம் ஒன்றை வெடிக்கச் செய்து, 36 பேரை கொலை செய்து தண்டனையில் இருந்து அவர் தப்பியுள்ளார்.
அது போக 400 இளைஞர்கள் தமது ஆண் உறுப்பை வெட்டி எறிய தயாராக இருந்துள்ளார்கள். சாமியாருக்கு தண்டனை கிடைத்தால் தமது ஆண் குறிகளை தாம் வெட்டி எறிவோம் என்று கொதித்து எழுந்த 400 இளைஞர்களை பார்த்து பொலிசார் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல சர்வதேசமே மிரண்டு விட்டது. வெளிநாட்டு செய்தி சேவை பல இது குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. யார் இந்த சமியார் ?
பஞ்சாப், ஹரியானா அரசுகளை மிரட்டும் வகையில் தேரா சச்சா சவுதா என்கிற ஆன்மீக அமைப்பை நடத்தியவர் ராம் ரஹீம் சிங். மார்டன் சாமியாராக, நடிகராக, பாப் பாடகராக மக்களை வசியப்படுத்தியவர் ராம் ரஹீம் சிங்.
அரசுகள் மண்டியிட்டன ?
இவருக்கு திரண்ட கூட்டங்களைப் பார்த்து பஞ்சாப், ஹரியானா அரசுகள் மண்டியிட்டன. இதனால் ராம் ரஹீம் சிங் ஆசிரமங்கள் வன்முறை கும்பலின் கூடாரங்களாக, ஆயுத கிடங்குகளாக உருமாறின.
பஞ்ச்குலா வன்முறை:
ராம் ரஹீம்சிங் வழக்கில் தீர்ப்பு வரும்; வன்முறை வெடிக்கும் என தெரிந்து விடுமுறை விட்டு போக்குவரத்தை ரத்து செய்த அரசுகள் இந்த கும்பலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்தன. இதன்விளைவுதான் பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் போர்க்களமானது.
36 பேர் பலி:
பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன; வன்முறை கும்பல் சரமாரி கற்களை வீசியது; ஆயிரக்கணக்கான குண்டர்கள் நடத்திய இந்த அட்டூழிய வன்முறையில் 36 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆனால் ஹரியானா அரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது.
ஹரியானா உயர்நீதிமன்றம் கொடுத்த அடி
இதற்குதான் ஹரியானா உயர்நீதிமன்றம் மாநில அரசை வெளுத்து கட்டியிருக்கிறது. தேர்தல் காலங்களில் ராம் ரஹீம்சிங்கிடம் பெற்ற நன்கொடைக்காக அரசியல் கட்சிகளும் அரசுகளும் ஒரு குண்டர் கும்பலின் தலைவனிடம் கைகட்டி நின்றிருப்பது மாபெரும் வெட்கக் கேடாது! இதன் விளைவுதான் 36 மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கிறது.





No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்