Header Ads

உலகையே அச்சுறுத்திய வடகொரியா - நள்ளிரவில் செலுத்தப்பட்ட ஏவுகணைகள் (காணொளி)

வடகொரியா தமது கிழக்கு கடற் பிராந்தியத்தில் பல ஏவுகணைகளை பரிசோதணை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடகொரியா நேரப்படி இன்று காலை இந்த சோதனை இடம்பெற்றுள்ளதாக தென்கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. 


ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்களை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. வடகொரியாவின் காங்வான் மாகாணத்தில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை 250 கிலோ மீட்டர் தூரம் சென்று கடலில் விழுந்துள்ளதாக தென்கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. 


இந்த நிலையில் நிலைமைகளை கூர்ந்து அவதானித்து வருவதாக தென்கொரிய இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த ஏவுகணை குவாம் தீவை இலக்கு வைத்து ஏவப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.