செக்ஸ் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம்-க்கு நீதிமன்றம் இன்று வழங்கிய தண்டனை போதுமானதா ?
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங்-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ தனி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
இந்தியா - அரியானா மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங். இவர் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டு வட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் சுமார் 6 கோடி ஆதரவாளர்கள் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இவருக்கு சுமார் 300 ஆசிரமங்கள் உள்ளன. பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு இவர் அதிபதியாக உள்ளார்.
இவர் மீது கடந்த 2002-ம் ஆண்டு பாலியல் பலாத்கார புகார் செய்யப்பட்டது. ஆசிரமம் பெண்கள் 2 பேரை இவர் பாலியல் பலாத்காரம் செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு ரோத்தக் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பை வெளியிட்ட நீதிமன்றம், குர்மீத் ராம்ரகீம் சிங்கை குற்றவாளி என்றும் அவருக்கு தண்டனை விவரம் இன்று வெளியிடப்படும் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயம் அடைந்தனர்.
கோடிக்கணக்கான மதிப்புடைய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதற்கிடையே குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட குர்மீத் ராம்ரகீம்சிங் ரோத் தக்கில் உள்ள சுனரியா சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த சிறைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிறையை சுற்றி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
தண்டனை விபரங்கள் இன்று அரியானாவில் மிகப் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா, தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேரா சச்சா அமைப்பின் 103 வழிபாட்டு மையங்களை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
3 மாநிலங்களிலும் பெரும் பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை ஏற்படலாம் என்று கருதப்படும் இடங்களில் ராணுவ வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
சிறைக்குள் சி.பி.ஐ. நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக நீதிபதி ஜெகதீப் சிங்கை குர்மீத் அடைக்கப்பட்டுள்ள சுனரியா சிறைக்கு ஹெலிகாப்டரில் பொலிசார் அழைத்துச் சென்றனர்.
மதியம் 2.30 மணிக்கு தீர்ப்புக்கான இரு தரப்பு வாதப்-பிரதிவாதம் தொடங்கியது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்