14 வயது சிறுமிக்கு துப்பாக்கி முனையில் நடந்த கொடூரம்! ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது
உத்தரப்பிரேதசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா, உத்தரப்பிரேதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜாமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த அன்கிட் குமார் என்ற வாலிபர் அச்சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளான். அதனை தடுத்த சிறுமியை அன்கிட் அடித்து துன்புறுத்தியுள்ளான்.
பின்னர் தனது துப்பாக்கியை காட்டி மிரட்டி அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளான்.
இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அன்கிட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவனை கைது செய்த பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்