அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை.! மக்களே உஷார்!!
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்துகளை கண்காணித்து உட்செலுத்துவதற்கு உயர் தொழில்நுட்ப கணினி உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், கணினிகளை ஊடுருபவர்கள் அந்த மருத்துவ கணினிகளை ஊடுருவி படுகொலைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
மேற்படி கணினிகளை ஊடுருபவர்கள் மருத்துவமனை கணினிகளை ஊடுருவி அதனை தமக்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தி மருந்து விநியோக அளவை பல மடங்கு அதிகரித்து நோயளியைக் கொல்வதற்கு சாத்தியமுள்ளதாக அமெரிக்க வைட்ஸ்கோப் பாதுகாப்பு அமைப்பின் சைபர் தாக்குதல் பாதுகாப்பு நிபுணரான பில்லி றியொஸ் தெரிவித்தார்.
லாஸ் வெகாஸில் இடம்பெற்ற பிளக் ஹட் சைபர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கணினிகளை ஊடுருபவர்கள் பொது மருத்துவமனை கணினிகளை ஊடுருவி அவற்றின் நிகழ்ச்சித் திட்டங்களை தமக்கேற்றவாறு மாற்றியமைத்து நோயாளிக்கு முறைகேடான வகையில் மருந்துகளை விநி
யோகிக்க கணினிக்கு உத்தரவிட்டு அவரை படுகொலை செய்யும் அபாயமுள்ள
தாக அவர் கூறினார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்