ஜனாதிபதியின் மகள் ஆடையின்றி உள்ளாடையுடன் பிள்ளைக்கு பாலூட்டும் படம் சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது!!
கிர்கிஸ்தான் ஜனாதிபதியின் இளைய மகள் உள்ளாடைகளை மட்டும் அணிந்தவாறு தனது குழந்தைக்கு பாலூட்டுவதை வெளிப்படுத்தும் புகைப்படமொன்று வெளியாகி பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. மேற்படி புகைப்படமானது தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிப்பதை விடவும் பாலியல் ரீதியானதாக உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கிர்கிஸ்தான் ஜனாதிபதி அல்மஸ்பெக் அதம்பாயெவ்வின் இளைய மகளான அலியா ஷகியவா , 'நான் எனது மகனுக்கு எங்கு எப்போது தேவைப்படுகிறதோ, அங்கு அப்போது அவனுக்கு தாய்ப்பாலூட்டுகிறேன்' என்ற தலைப்பில் மேற்படி புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மேற்படி புகைப்படமானது தார்மீகத்துக்கு முரணானதாகவுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, அவர் அந்தப் புகைப்படத்தை சமூக இணையத்தளத்திலிருந்து அகற்றியுள்ளார்.
மேற்படி புகைப்படத்தால் பொதுமக்கள் மட்டுமல்லாது அவரது தந்தையான ஜனாதிபதி அல்மஸ்பெக் அதம்பாயெவ்வும் தாயாரான ரெய்ஸாவும் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்க ப்படுகிறது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்