Header Ads

ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பிரதமர்! தற்போது நடந்த திடீர் மாற்றம் என்ன ?

ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பிரதமர் எகுத் ஆல்மர்ட் சில நிபந்தனைகளுடன் சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார். ஊழல் வழக்கில் சிறையிலிருந்த இஸ்ரேல் முன்னள் பிரதமர் விடுதலை ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் ஹோலிலேண்ட் ரியல் எஸ்டேட் ஊழல் வழக்கும் ஒன்று. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் எகுத் ஆல்மர்ட்டுக்கு 19 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 


இதேபோல் லஞ்ச வழக்கு ஒன்றில் 8 மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. இந்த தண்டனைக் காலத்தில் 16 மாத தண்டனை அனுபவித்துள்ள ஆல்மர்ட், நன்னடத்தை காரணமாக தன்னை பரோலில் விடுதலை செய்யக்கோரி பரோல் கமிட்டியிடம் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் மற்றும் தண்டனைக் காலத்தில் அவரது நடத்தைகளை ஆய்வு செய்த பரோல் கமிட்டி, அவரை பரோலில் விடுவிக்க முடிவு செய்தது. 


குற்றவாளி ஒருவர் தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கினை அனுபவித்தால், நன்னடத்தையை கருத்தில் கொண்டு எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை குறைக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, இச்சட்டத்தின் படி ஆல்மர்ட் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என அரசு தெரிவித்திருந்தது. 


இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, மாதம் இரு முறை போலீசார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் மற்றும் குறிப்பிட்ட காலம் வரை தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது, தன்னார்வ பணிகளில் ஈடுபட கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் எகுத் ஆல்மர்ட் சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளிவந்த ஆல்மர்ட்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த பாதுகாப்புடன் அவரது இல்லத்தில் கொண்டு விட்டனர். மேலும், அவர் தங்கியுள்ள இல்லத்திலும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.