பிரான்சில் மூதாட்டியை பலாத்காரம் செய்தது இவரா ? பொலிஸார் வலை வீச்சு
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் வாரணாசி பகுதியில் செயல்பட்டு வருகின்ற தொண்டு நிறுவனத்திற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1977 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தொண்டு நிறுவன வேலைக்காக கடந்த 11 மாதமாக ரோகானியா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் ஒருவர் நேற்று முன்தின இரவு மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கையடக்கத்தொலைபேசியினை பறித்து கொண்டு ஓடிவிட்டார்.
இச்சம்பவத்தை கேள்வி பட்ட அயலவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் மூதாட்டியினை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிஸார் தப்பி ஓடிய பாதுகாவலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்