Header Ads

தந்தையால் எனக்கு நேர்ந்த கொடுமை! 11 வயதில் தொடங்கி தற்போது 45 வயதிலும்…. கதறும் நடிகை!

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள என தென்னிந்திய படங்களில் நடித்து வருபவர் நடிகை தபு. 11 வயதில் நடிக்க வந்த அவருக்கு 45 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனியாகவே வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தபு தனது வாழ்க்கை பற்றி கூறினார். என் அப்பாவுக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும். 


ஆனால் நானும், என் அக்காவும் பெண்ணாக பிறந்துவிட்டோம். முதல் குழந்தை பெண், அதனால், இரண்டாவது குழந்தையாவது ஆணாக பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்தபோது நானும் பெண்ணாக பிறந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அப்பா என்னிடம் வெறுப்பை மட்டுமே காட்டினார். அதனால் என்னை நானே வெறுக்கத் தொடங்கிவிட்டேன். நான் சிறுமியாக இருக்கும்போதே என் அம்மாவும், அப்பாவும் பிரிந்துவிட்டனர். 


அம்மாவுக்கு என் மீது பாசம் அதிகம். ஆனால் அது என் அக்காவுக்கு பிடிக்காததால், எப்போது பார்த்தாலும் என்னை அழ வைத்துக் கொண்டே இருப்பாள். ஆனால், நான் எதுவாக இருந்தாலும் அவளை கேட்டு தான் செய்ய வேண்டும். என் அப்பாவால் நான் பயந்த சுபாவம் உள்ளவள் ஆகிவிட்டேன். அதனால், என் முதல் படத்தை மிகவும் பதட்டத்துடனே நடித்தேன். அந்த படத்தை இதுவரை நான் பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அக்காவும் படத்தை பார்த்துவிட்டு நான் மிகவும் நன்றாக நடித்திருப்பதாகக் கூறி அழுதார்கள் என்றார் தபு.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.