யாழில் இருந்து இந்தியா எஸ்கேப் ஆன காவாலிகள் கியூ பிரிவில் சிக்க வேடிக்கை பார்க்கும் சிங்களப் பொலிஸ்
யாழில் பல வாள்வெட்டு, கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா கடத்தலோடு சம்பந்தப்பட்ட, தேவா, பிரகாஷ் அடங்கலாக மேலும் ஒரு நபர் திருச்சிக்கு தப்பிச் சென்றுள்ளார்கள். யாழில் இவர்களை பொலிசார் தேட ஆரம்பித்தவேளை. இவர்கள் கள்ள தோணி மூலம் இந்தியா சென்று. திருச்சியில் தங்கியிருந்துள்ளார்கள். இவர்கள் பதுங்கிப் பதுங்கி ஒரு இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருப்பதாக பலர் புகார் கொடுத்துள்ளார்கள்.
இதனை அடுத்து தமிழ் நாட்டு பொலிசாரின் கியூ பிரிவு இவர்களை கைது செய்து விசாரணை நடத்திய வேளை இவர்கள் உண்மை எதனையும் கக்கவில்லை. ஆனால் பின்னர் விசாரிக்கவேண்டிய வகையில் தமிழ் நாடு பொலிசார் விசாரித்ததில். இவர்கள் தாமே வாள் வெட்டு கோஷ்டி என்று ஒப்புகொண்டுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் தமிழ் நாட்டில் எந்த குற்றமும் செய்யவில்லை. இதனால் அவர்களை சிறையில் தொடர்ந்து அடைத்து வைத்திருக்க முடியாது.
இன் நிலையில் இலங்கைப் பொலிசார் ஏதாவது ஆவணத்தை சமர்பித்தால், அவர்களை நாடு கடத்த தமிழக பொலிசார் விரும்பம் தெரிவித்துள்ள நிலையில். எந்த ஒரு ஆதாரத்தையோ , இல்லை குற்றப் பத்திரிகையையோ இதுவரை சிங்களப் பொலிசார் கொடுக்கவில்லை. இதனூடாக சிங்களப் பொலிசார் இந்தக் காவாலிகளை காப்பாற்ற முனைகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பல பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்