தினமும் குறைந்தது 10 பேர் ! திணறி வரும் மூன்றெழுத்து நடிகை!
மூன்று எழுத்து நடிகை (three letter actress) தற்போது ஹீரோக்களுடன் நடிக்கமாட்டேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து, அதுபோன்ற கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடித்த ஒரு பேய் படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தபோதும் தனது முடிவில் விடாபிடியாகவே இருக்கிறாராம் அந்த நடிகை.
இந்த நடிகைக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நல்ல மார்க்கெட் உள்ளதால் அங்கேயும் நடிகையின் இந்த கொள்கை பரவ, தினமும் குறைந்தது 10 தயாரிப்பாளர்களாவது நடிகையிடம் போன் போட்டு என்னிடம் நீங்கள் நினைக்கிற மாதிரி ஒரு கதை உள்ளது, கேளுங்கள் என்று நச்சரித்து வருகிறார்களாம்.
அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நடிகை ரொம்பவும் திணறி வருகிறாராம். இருப்பினும், போன் செய்யும் தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு பதிலை சொல்லி கட் பண்ணி விடுகிறாராம் நடிகை. தயாரிப்பாளர்களின் நச்சரிப்பு தொடர்ந்துகொண்டே இருப்பதால், இனிமேல், கதை கேட்பதற்கு தனியாக ஒருவரை நியமிக்க நடிகை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்