Header Ads

ஐ.நாவில் சித்திரவதைக்கு எதிரான கூட்டத்தொடரில் ஸ்டாலின் ஈழமக்களுக்காக பேச உள்ளார்



ஜெனீவாவில் உள்ள ஐ.நா மன்றில் ஜூன் 12ம் திகதி, உலக சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டத்தொடர் ஒன்று இடம்பெற உள்ளது. இதில் உலகில் பல நாடுகளில் மனித குலத்திற்கு எதிராக நடந்த சித்திரவதைகள் தொடர்பாக அலசி ஆரயப்பட உள்ளது. இக் கூட்டத்தொடரில் முக்கிய உறுப்பினராக கலந்துகொள்ள உள்ள, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்ற உள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.

இதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னை திருவான்மையூரில் தங்கி இருந்த காலங்களில் அவரோடு நெருங்கிய நட்ப்பு வட்டாரத்தில் இருந்தவர். மேலும் 1983ல் இல் இருந்து ஈழப் பிரச்சனைக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகிறார். சற்று முன்னர் அவரை அதிர்வு இணையம் சார்பாக நாம் தொடர்புகொண்டு பேசியவேளை.

12ம் திகதி நடக்கவுள்ள ஐ.நா மன்றில் தளபதி அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பாக புள்ளிவிபரங்களோடு பேச உள்ளதாக எம்மிடம் தெரிவித்துள்ளார். மேலதிக பல ஆவணங்களையும் சாட்சிகளையும் அதிர்வு இணையம் தளபதி ஸ்டாலினிடம் கையளிக்க உள்ளது என்பதனையும் நாம் இவ்வேளையில், தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

5 comments:

  1. மிக சிறந்த புத்திஜிவி வந்து பேசப்போகிறார் .தமிழர்கள் தலையில் அடித்துக்கொள்ளவேண்டியதுதான் .ராதாகிருஷ்ணன் என்ற வழக்கறிஞ்சரின் ஈழம் தொடர்பான செயல்பாடுகள் பற்றி சந்தேகப்படவில்லை .ஸ்டாலினின் தி மு க லட்சக்கணக்கில் கொன்று குவித்ததை அதிகாரத்தில் இருந்தும் தடுக்க தவறிய குற்றவாளிகள் .அவர்களை அழைத்து புனிதர்களாகி விடுவார்கள் போல் தெரிகிறது .அதிர்வும் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது சரியா ?

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் பேச மாட்டீர்கள், பேச வருபவர்களையும் பேச விட மாட்டீர்கள். அன்று செல்வாக்காக வைகோ இல்லையா ? திருமா இல்லையா ? வேல் முருகன் இல்லையா ? பழ நெடுமாறன் இல்லையா ? இவர்கள் எல்லோரும் செல்வாக்கு இல்லாதா ஆட்களா ? இவர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும் இன அழிப்பு நடந்திருக்கும். இந்திய மத்திய அரசின் முடிவுகளை எவராலும் தடுக்க முடியாது. இது அரசியல் தெரியாமல், உணர்ச்சி அரசியல் பேசும் உங்களை போன்ற பொதுவானவர்கள் தரும் விளக்கமே.

      தற்போது ஸ்டாலின் அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக பேசுகிறார் என்றால் தோழ் தட்டிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இப்படி ஒருவரை ஒருவர் தாழ்த்திப் பேசி தான் நாம் தற்போது ஆதரவை இழந்து நிற்கிறோம். இனியாவது திருந்த நினையுங்கள் ஐயா ...

      Delete
    2. அடுத்து கருணா ,பிள்ளையான் ,கோத்தபாய இப்படி வரிசையாக அழைத்து வந்து தோளில் தட்டிக்கொடுத்து பேசவைப்போம் .எல்லாவற்றையும் ஞாயப்படுத்த ஒரு காரணம் கிடைக்காமலா போய்விடும் நமக்கு .

      Delete
  2. நீங்களும் பேச மாட்டீர்கள், பேச வருபவர்களையும் பேச விட மாட்டீர்கள். அன்று செல்வாக்காக வைகோ இல்லையா ? திருமா இல்லையா ? வேல் முருகன் இல்லையா ? பழ நெடுமாறன் இல்லையா ? இவர்கள் எல்லோரும் செல்வாக்கு இல்லாதா ஆட்களா ? இவர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும் இன அழிப்பு நடந்திருக்கும். இந்திய மத்திய அரசின் முடிவுகளை எவராலும் தடுக்க முடியாது. இது அரசியல் தெரியாமல், உணர்ச்சி அரசியல் பேசும் உங்களை போன்ற பொதுவானவர்கள் தரும் விளக்கமே.

    தற்போது ஸ்டாலின் அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக பேசுகிறார் என்றால் தோழ் தட்டிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இப்படி ஒருவரை ஒருவர் தாழ்த்திப் பேசி தான் நாம் தற்போது ஆதரவை இழந்து நிற்கிறோம். இனியாவது திருந்த நினையுங்கள் ஐயா ...

    சுதன்

    ReplyDelete
    Replies
    1. அது யாரப்பா இடையில் ,பதவியில் இருந்தவங்கள் எல்லாம் பதவிக்காக வும் வஞ்சம் தீர்க்கவும் அரை மணி நேர படுத்து உறங்கல் பக்கத்தில் பத்தினிகள் ,சுத்தி நின்று தொலைகாட்சிகள் .ஈழ தமிழனுக்காக பேசுபவன் தன்மானமுளள தமிழனாக இருக்கவேண்டும்,அல்லது மனசாச்சி உள்ள மனிதனாக இருக்கவேண்டும் .இது இரண்டும் அந்த கட்டுமர கூடத்திற்கே இல்லை வரலாற்றை களில் இருந்து திரும்பி பார்க்கவேண்டும் .

      Delete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.