Header Ads

தேடிச் சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த போதை ஆசாமி

மரிஜுவானாவைத் தேடிச் சென்ற போதை தடுப்புப் பிரிவு பொலிஸார், ஓப்பியத்தைக் கண்டுபிடித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் வடகரோலினா மாகாணத்தின் கிளேர்மன்ட் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மரிஜுவானா பயிரிடப்பட்டிருப்பதான சந்தேகத்தின் பேரில் போதைத் தடுப்புப் பொலிஸார் அங்கு சென்றனர். 


குறித்த வீட்டைத் தட்டியபோது கதவைத் திறந்தவர், “நீங்கள் ஓப்பியத்தைத் தேடி வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்” என்று பொலிஸாருக்கே அதிர்ச்சி கொடுத்தார். தேடுதல் நடவடிக்கையின்போது, அவரது வீட்டின் பின்புறமுள்ள சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் ஓப்பியம் பயிரிடப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸார் மேலும் அதிர்ச்சியுற்றனர். இதன் மொத்த ஒடை சுமார் ஆயிரம் கிலோ. 


இதையடுத்து, சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பயிரைப் பயிரிட்டிருந்த குற்றத்தின் பேரில் கொடி ஸியோங் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.