Header Ads

ரமலான் நோன்பு மாதத்தில் முதல் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ? 18 பேர் சம்பவ இடத்தில் மோசமாக சாவு

தீவிரவாத அச்சுறுத்தல் தலைவிரித்து ஆடும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ரமலான் நோன்பு மாதம் பிறந்த முதல் நாளான இன்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலுக்கு 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான்: ரமலான் நோன்பு மாதத்தில் முதல் தாக்குதல் - கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி காபுல்: தீவிரவாத அச்சுறுத்தல் தலைவிரித்து ஆடும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ரமலான் நோன்பு மாதம் பிறந்த முதல் நாளான இன்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலுக்கு 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தின் அருகே இன்று நடந்த இந்த தாக்குதலில் 18 பேர் உடல் சிதறி பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் வடமேற்குப்பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணம் காடிஸ் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும், 


இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 22 தீவிரவாதிகள், 6 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 8 பேர் பலியாகினர். இரு தரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.