ஆத்தாடி இப்படி ஒரு விபத்தா ? ரயில் வண்டியே இப்படி தடம் பிரண்டுவிட்டது!
வட இந்தியாவில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் சுமார் 38 பேர் படுகாயங்களுக்கு உள்ளாயினர். இச்சம்பவம் நேற்று (29) டெல்லிக்கு அருகாமையில் இடம்பெற்றது.
மத்திய பிரதேசம், ஜபல்பூரில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கிப் புறப்பட்ட ‘மஹாகோஷல் எக்ஸ்ப்ரஸ்’ என்ற கடுகதி ரயில், டெல்லிக்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்ற தடம்புரண்டது.
இதில் ரயிலின் எட்டுப் பெட்டிகள் முற்றிலும் கவிழ்ந்தன.
இதையடுத்து அப்பகுதி மக்களும் ரயில்வே பொலிஸாரும் பெட்டிகளுள் சிக்குண்டிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளை மீட்டெடுத்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்த மீட்புப் படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் இணைந்துகொண்டனர்.
விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்துகொண்டிருப்பதாக இந்திய ரயில்வே பேச்சாளர் சக்சேனா தெரிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்