ஏலியன்கள் எமது கிரகத்தில் வாழ்ந்து விட்டு பின்னர் சென்றுவிட்டார்கள்- ஆதாரங்கள் இதோ
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏலியன்கள் எமது சூரிய குடும்பத்தில் வாழ்ந்துவிட்டு. பின்னர் எந்த தடையங்களையும் விட்டுவைக்காது அங்கிருந்து சென்றுவிட்டதாக நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். எமது சூரிய குடும்பத்தில் உள்ள யுரேனஸ், செவ்வாய் அல்லது எமது பூமியில் அவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும். இந்த 3 கிரங்களில் ஒரு கிரகத்தில் அவர்கள் வாழ்ந்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பூமியில் உயிரினங்கள் தோன்ற ஏதுவாக சில வேலைகளை செய்யவே அவர்கள் செவ்வாய் அல்லது யூரேனஸ் கிரகத்தில் தங்கியிருந்திருக்கவேண்டும் என்றும். அவர்கள் தடையங்களை அழித்துவிட்டுச் சென்றாலும் அதனை கண்டு பிடிக்க தன்னிடம் ஒரு புது கோட்பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள கருத்துகள். விஞ்ஞான உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல மில்லியன் மைல்களை கடக்க அவர்கள் பாவிக்கும் அதி நவீன விண் கலங்கள், எமது சூரிய குடும்பத்தில் விட்டுச் சென்ற ஒருவகையான துகள்கள்(எரிபொருள்) இதற்கு சாட்சி என்கிறார் அந்த விஞ்ஞானி. தனது ஆராட்சியின் முடிவில் அதனை அவர் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்