மீண்டும் லேபர் கட்சி ஈழத் தமிழர்கள் பக்கம்: லண்டனில் எடுக்கப்பட்ட முடிவு
GSP+ விவகாரம் - சிறீலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றில் வாக்களிக்க தொழிற்கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. GSP+ வரிச்சலுகை விவகாரத்தில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வாக்களிப்பதற்கு பிரித்தானியாவின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர்.
அத்தோடு பிரித்தானிய தொழிற்கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த முடிவிற்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தொழிற்கட்சியின் நேச நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கான உறுதிமொழி கடந்த வாரம் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா அவர்களிடன் பிரித்தானிய தொழிற்கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் மார்ட்டின் (David Martin) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. GSP+ விவகாரத்தில் தமக்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரித்தானிய தொழிற்கட்சி எடுக்க வேண்டும் என்று டேவிட் மார்ட்டின் அவர்களிடம் அண்மையில் அவரைச் சந்தித்த சிறீலங்கா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கோரியிருந்த பொழுதும், அதனை டேவிட் மார்ட்டின் அவர்கள் அடியோடு நிராகரித்திருப்பதோடு, தமிழ் மக்களுக்கு ஆதரவாகத் தொழிற்கட்சியின் ஏனைய ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் அவர் திரட்டியுள்ளார்.
சிறீலங்கா அரசாங்கத்திற்கு GSP+ வரிச்சலுகை வழங்கப்படுவதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு பிரித்தானியாவின் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி (Conservative Party) முடிவு செய்துள்ள நிலையில், இவ்விடயத்தில் தமிழர்களுக்கு ஆதரவாகவும், சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராகவும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வாக்களிப்பதற்கு ஜெரமி கோர்பின் அவர்களின் தலைமையிலான பிரித்தானிய தொழிற்கட்சி தீர்மானித்துள்ளமை பிரித்தானியாவாழ் தமிழ் மக்களிடையே தொழிற்கட்சித் தலைமைத்துவம் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்