சோமாலியா கடத்தல்: கப்பலில் சண்முகம் கதறியபோதும் அமெரிக்க 5ம் கடல்படை உதவவில்லை: பகீர் தகவல்
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சோமாலயாவின் தலை நகர் மொகடிஷுவுக்கு சென்றுகொண்டு இருந்த கப்பலை, சோமாலிய கடல் கொள்ளையர் கடத்தினார்கள். இதில் மொத்தமாகா 7 பேர் இருந்துள்ளார்கள். இக் கப்பலை இயக்கிய நபர்கள் அனைவரும் இலங்கையர் என்பது போக, அதில் சண்முகம் என்ற இலங்கை தமிழரும் இருந்துள்ளார். கப்பலை சோமலிய கடல் கொள்ளைர்கள் முற்றுகையிட்ட போது, அதில் இருந்து தப்ப முடியாது என்று அவர் உணர்ந்து,
உடனடியாக வாக்கி டோக்கியை எடுத்து அனைவரும் கேட்க்கும் அலை வரிசையில் உதவி கோரியுள்ளார். இதனை இந்திய பெருங்கடலில் நின்ற அமெரிக்க 5வது கடல்படை கப்பல் அவதானித்துள்ளது. அவர்களது உள்வாங்கி ரேடியோவில், அவரது உதவிக் குரல் கேட்டுள்ளது. ஆனால் அவர்கள் உதவிக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது அமெரிக்க ஊடகங்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது 5வது கடல் படையின், சிறியரக மற்றும் அதிவேக தாக்குதல் படகுகளை இந்திய பெருங்கடலில் நிறுத்திவைத்துள்ளது.
இவை சோமாலிய கடல் கொள்ளையர்களை கையாழ்வதற்கு தான் என்று அமெரிக்கா பல காலமாக கூறிவந்துள்ளது. ஆனால் 2013ம் ஆண்டு முதல் சோமாலிய கடல் கொள்ளையர்கள், அடக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்தது. அவர்களால் இனி ஆபத்து இல்லை என்றும் அவர்கள் அறிவித்திருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்