Header Ads

எல்ப்ஸ் மலைப் பகுதியில் திடீர் என்று நடந்த கோரச் சம்பவம்!! இதனால் பெரும் பீதியில் மக்கள்

பிரான்ஸின் எல்ப்ஸ் மலைச் சிகரத்தில் ஏற்பட்ட திடீர் பனிச் சரிவில், பனிச் சறுக்கு வீரர்கள் பலரும் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எல்ப்ஸ் மலைத்தொடரில், ‘டிக்னெஸ்’ எனப்படும் பனிச் சறுக்கு முகாம் அமைந்துள்ள வால் கிளேரட் பகுதியில், 


உள்ளூர் நேரப்படி காலை சுமார் பத்து மணியளவில் இந்தப் பனிச் சரிவு ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. மேற்படி முகாம் அமைந்திருக்கும் ஒட்டுமொத்தப் பகுதியும் இந்தப் பனிச் சரிவால் மூடப்பட்டிருப்பதாகவும், மீட்புக் குழுவினர் அந்த முகாமில் கலந்துகொண்ட வீரர்களையும் ஏனையோரையும் மீட்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், 


கடும் பனி மூட்டம் நிலவுவதால் ஹெலிகொப்டர்களை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்த முடியாதிருப்பதாகவும், தரை வழியாக நெடுந்தூரம் பயணித்தே மீட்புப் பணியாளர்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லவேண்டியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் பற்றி இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.