ஈழத்தமிழர் கனடாவில் படைத்த சாதனை
கனடாவின் டொரன்டோ நகர சபை உறுப்பினராக இலங்கைத் தமிழரான நீதன் ஷான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்காபரோ - ரூஜ்ரிவர் வார்ட் இலக்கம் 42ல் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல் ஒன்றில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று உறுப்பினராகியிருக்கிறார் நீதன்!
இருபத்தொன்பது பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தல், மற்றெவரையும் விட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் நீதன் வெற்றிபெற்றிருப்பதாகத் தெரியவருகிறது. நீதன் 4,763 வாக்குகளையும், நீதனுக்கு அடுத்தபடியாக ஸுஹைர் செய்யத் 1,452 வாக்குகளையும், முன்னாள் நகரசபை உறுப்பினர் ரேமன்ட் சோவின் உதவியாளர் ராச் ஐநெஜியான் 1,055 வாக்குகளையும் பெற்றனர்.
பதினாறு வயதில் அகதியாக கனடாவுக்கு இடம் பெயர்ந்த நீதன், பன்மொழி ஆசிரியராகக் கடமை புரிந்தவர். கடந்த பல வருடங்களாகவே இந்தப் பதவிக்காகப் போட்டியிட்டு வரும் நீதன் ஷான், ‘ஸ்காபரோ ஃபெர்ஸ்ட்’ என்ற, ஸ்காபரோவை முன்னணிக்குக் கொண்டுவரும் திட்டங்களையே தொடர்ந்து அறிவித்து வந்ததுடன்,
ஸ்காபரோவில் வாழும் பல்வேறு சமூகத்தினரது பிரச்சினைகளும் நகர சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் தீவிரமாகவும் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்