Header Ads

ரஜனி யாழ்பாணம் செல்வதில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது: ஏன் செல்லவேண்டும் என்று வாக்குவாதம்



தற்போது எந்திரன் 2.00 நடித்து முடித்துள்ள ரஜனிகாந், வரும் 8ம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை வடக்கில் 150 வீடுகளை கட்டி ஈழத் தமிழர்களுக்கு கொடுக்கிறது. குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவே ரஜனி யாழ் செல்லவுள்ளார். அதற்கு முன்னதாக அவர் வெளியிட்ட சிறிய உரை ஒன்று, தமிழகத்தில் அரசியல்ரீதியாக பெரும் சர்சையை கிளப்பி விட்டுள்ளது. நான் ஈழத் தமிழர்களுக்கு உதவச் செல்கிறேன் என்று அவர் கூறிய விடையமே இதற்கு காரணம்.

அப்படி என்றால் இவ்வளவு நாளாக என்ன செய்தார் என்று தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் ஒரு சூட்சுமமும் உள்ளது என்கிறார்கள். அது என்னவென்றால் தமிகழமே எழுச்சியடைந்து ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவேளை, போராட்டத்திற்கு ரஜனி ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் மாணவர்கள் அமைப்பில் பெரும் எதிர்ப்பை அவர் சம்பாதித்துள்ளார். இதன் பின் விளைவாகவே இந்தப் பிரச்சனை பார்க்கப்படுகிறது.  ஐ.நாவில் இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் கொடுக்கப்பட்டது , பல தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

இன் நிலையில் ரஜனி போன்ற பிரபலங்கள் இலங்கை சென்றால், அது இலங்கை அரசுக்கு கிடைத்த ஒரு அங்கிகாரமாகவே பார்க்கப்படும் என்பது பலரது விவாதமாக உள்ளது. எல்லோரும் சென்றுவரக் கூடிய சுமூகமான நிலையில் இலங்கை உள்ளதாகவும். அன் நாட்டில் தமிழர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கும். எனவே ரஜனி காந்த் இலங்கை செல்லக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதுபோக ரஜனி தமிழர்களுக்கு உதவவேண்டும் என்றால். அவரது நண்பரான நரேந்திர மோடியூடாக காய் நகர்த்தல்களை மேற்கொள்ளலாமே என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் MP தெரிவித்துள்ளார்.

ஒட்டு மொத்ததில் ரஜனி காந்த யாழ் செல்வது, அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கவில்லை என்ற தோற்றப்பாடு தோன்றியுள்ளது என்கிறார்கள். இதனால் அவருக்கு சிலவேளை எதிர்ப்புகள் கிளம்பலாம் என்றும் கூறப்படுகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.