வேலைக்குதான் போனேன்! அங்கு 25 ஆண்கள் என்னை கற்பழித்துவிட்டார்கள் ! இதற்காக குற்றவாளிகள் கைதாகாமல் தப்பிக்க 1.75 கோடி ரூபா
இந்தியாவின் கேரள மாநிலத்தில் வேலைத்தேடி வந்த 26 வயதான பெண் ஒருவரை வீட்டில் ஒரு மாத காலமாக தடுத்து வைத்து 25 பேர் பாலியல் வல்லுறவு படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதாகாமல் தப்பிக்க 1.75 கோடி ரூபா பொலிஸ் அதிகாரி இலஞ்சம் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வேலைக்காக கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மூவாற்றுப்புழா பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் கொச்சிக்கு சென்றவேளையில், தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறியொருவர், அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலை தருவதாக கூறி அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
பின்னர் கொச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பில் அடைத்து வைத்து சுமார் ஒரு மாதம் 25 பேர் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளதாகவும்,இதனையடுத்து அங்கிருந்து தப்பிய இளம் பெண் கொச்சி பாலாரிவட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் விசாரணையில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த 25 பேரையும் கண்டறிந்த பொலிஸ் அதிகாரி விஜயன் அவர்களை கைது செய்யாமல் இருக்க ஒவ்வொருவரிடமும் தலா 7 இலட்சம் வீதம் மொத்தம் 1.75 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுள்ளார்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடினை பதிவு செய்யாமல் இருந்துள்ளார். இந்த விபரம் கொச்சி தனிப்பிரிவு பொலிஸூக்கு தெரிய வந்ததையடுத்து பொலிஸ் அதிகாரி விஜயனை பதவிநீக்கம் செய்ய எர்ணாகுளம் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்