Header Ads

இலங்கைக்கு ஏன் வருகிறது சீனாவின் உயர்மட்ட பாதுகாப்பு குழு ? பெரும் சிக்கலில் இந்தியா



சீனாவின் உயர் மட்ட பாதுகாப்பு குழு அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ளது. அம்பாந்தொட்டையில் முன்னெடுக்கப்படுகின்ற சீனாவின் சிறப்பு வர்த்தக வலயம், அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் மற்றும் கொழும்பில் முன்னெடுக்கப்படுகின்ற துறைமுக நகர் திட்டம் என்பவற்றை கண்காணித்தல் இந்த குழுவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

சீனா அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் பல்வேறு சர்ச்சைகளை உள்ளக அரசியல் சூழலில் எதிர் கொண்ட நிலையில் ஆரம்பத்தில் துறைமுக நகர் என அழைக்கப்பட்ட தற்போதைய நிதி நகரத்தின் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அம்பாந்தோட்டையில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த வாரத்தில் இறுதியில் இலங்கைக்கு வரவுள்ள சீன குழுவானது அந்நாட்டு பாதுகாப்பு துறையை சார்ந்த குழு என இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவர்களது விஜயமானது அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் உள்ளிட்ட இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற சீனு திட்டங்களை கண்காணிப்பதாக குறிப்பிடப்பட்டாலும் பூகோள அரசியலை மையப்படுத்திய விஜயமாக காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. கட்டுமான பணிகளை பார்வையிட ஏன் பாதுகாப்பு அதிகாரிகள் வரவேண்டும் என்ற கேள்விகளும் உள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.