தரையில் இருந்து சென்று கப்பலை தாக்கும் ஏவுகணை: பாக்கிஸ்தான் பெரும் வெற்றி என்கிறது
தரையில் இருந்து புறப்பட்ட சென்று கடலில் உள்ள இலக்கை தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை நேற்று பாகிஸ்தான் நடத்தி உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் கடற்படை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில், “கடற்கரை பகுதியில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
அந்த ஏவுகணை கடலில் வைக்கப்பட்டிருந்த இலக்கை தாக்கியது. இந்த ஏவுகணை, அதிநவீன தொழில் நுட்பத்துடனும், வான்பயண மின்னணுவியல் தொழில் நுட்பத்துடனும் அமைந்ததாகும். இது மிக துல்லியமாக கடலில் உள்ள இலக்கை தாக்க ஏற்றதாகும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனை, கடற்படை துணைத்தளபதி கான் கஷாம் பின் சாதிக் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. கடற்படை தளபதி முகமது ஜகாவுல்லா விடுத்துள்ள செய்தியில், “இந்த ஏவுகணை, பாகிஸ்தான் கடற்படையில் புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்