ஒரே நேரத்தில் மனைவி காதலி ஆகிய இருவரையும் குவைத்தில் வைத்திருந்த இளைஞர்
யாழில் தனது மோபைல் போனில் ஏதோ அரட்டை அடித்துக்கொண்டு இருந்த இளம் பெண் அவள். அன்று தான் அவளுக்கு ஒரு தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. நான் குவைத்தில் இருந்து வந்துவிட்டேன். ஏன் என்னை பிக்கப் செய்ய வரவில்லை என்று அதட்டலாக கேட்ட அந்த குரல் யாருடையது என்று தெரியாமல் தடுமாறிய அந்த இளம் பெண். நீங்கள் ராங் நம்பருக்கு கால் செய்துவிட்டீர்கள் என்று கூறியுள்ளார். ஓ அப்படியா சாரி என்று கூறி உடனே கட் செய்துவிட்டான் அந்த ஆண். ஆனால் மீண்டும் சில நாள் கழித்து தொடர்புகொண்ட அவன்.
நான் அன்று அவசரத்தில் அப்படி அதட்டலாக பேசிவிட்டேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றான். அவன் பேசிய ஆசை வார்த்தைகள் லேசாக வருட. குறித்த இளைஞன் எப்படி இருப்பான். குவைத்தில் வேலை பார்கிறான் என்று கூறினான். குவைத் எப்படி இருக்கும் என்று கன்னி மனம் அலைபாய. மீண்டும் ஒரு முறை அவன் அழைக்க மாட்டான என்ற ஏக்கத்தில் அவள் இருந்தாள். இவ்வாறு டெலிபோன் ஊடாக இவர்கள் காதல் மலர. இறுதியாக அவன், நேரில் சந்தித்து உங்களை மணம் முடிக்க ஆசையாக உள்ளது என்று போட்டு உடைக்க. அவளும் பெற்றோரிடம் பேசி சம்பதம் பெற்றாள்.
இருவருக்கும் திருமணமாகியது. குறித்த இளைஞன் அவளை அழைத்துக்கொண்டு குவைத் சென்றுவிட்டான். அங்கே தனியாக ஒரு வீட்டை எடுத்து அவர்கள் தங்கியவேளை. இரவு வேளைகளில் கூட அவன் வீட்டுக்கு வருவது இல்லை. குவைத் சென்றபின்னர் அவனது நடவடிக்கையே சரியில்லை என்பதனை உணர்ந்த அப்பெண். அவனை ஒரு நாள் பின் தொடர்ந்துள்ளார். பின்னர் தான் அவன் ஏற்கனவே திருமணமானவன் என்றும். ஒரு குழந்தைக்கு அப்பா என்றும். வேறு ஒரு வீட்டில் மனைவியோடு இருப்பதும் தெரியவந்தது.
தான் ஏமாந்து போனதை நினைத்து கவலையடைந்த அவள். அவனிடம் நீதிகேட்டாள். ஆனால் அவனோ அவளுக்கு கொலை மிரட்டல் விடுத்தான். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எவரும் அறியாதவாறு புறப்பட்டு இலங்கை திரும்பியுள்ளார். இது தான் இன்றைய யாழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் திருமண ஆசை..

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்