வீடியோ: அதிவேக ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் குட்டிக்கரணம் அடித்த குட்டி விமானம்
நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் அதை கடக்க முயன்ற சிறிய விமானம் குட்டிக்கரணம் அடித்து 10 ஆயிரம் அடிவரை கீழ் நோக்கி சென்றதாகவும் அதில் இருந்த 9 பயணிகள் காயமடைந்ததாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ரக சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 சம்பவத்தன்று துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.அரபிக்கடலின் மீது சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட் நகரில் இருந்து சுமார் 630 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள வான் எல்லையில் பறந்தபோது, மாலத்தீவில் இருந்து துபாய் நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஒரு சிறியரக பயணிகள் விமானம் இரட்டை அடுக்கு இருக்கை வசதி கொண்ட அந்த ஜெட் ஏர்பஸ் விமானத்தை நெருங்கியது.
வழக்கமாக, கடல் நீரை கிழித்தபடி வேகமாக செல்லும் படகுகள் நீரில் காற்றலை போன்ற சுழல்களை ஏற்படுத்துவதுபோல், வளிமண்டலத்தை ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் அதிவேகமாக பறக்கும்போது விமானங்களில் இருந்து ஒருவிதமான சுழற்காற்று போன்ற எதிர்வீச்சு ஏற்படுவதுண்டு. வானூர்தி அறிவியலின்படி, ‘டர்புலன்ஸ்’ என்றும் ‘ஜி-போர்ஸ்’ என்றும் அழைக்கப்படும் இந்த சுழற்காற்றில் அவ்வழியாக கடந்து செல்லும் சில விமானங்கள் சிக்கித் திணறிய வரலாறு உண்டு.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்