பரந்துகொண்டிருக்கும்போது படார் என்று விழுந்த ஹெலிகாப்டர்! அடுத்த நிமிடம் நடந்தது ....
ஜப்பான் பனி மலைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.ஜப்பானின் நாகனோ பனி மலைப்பகுதியில் 7 மீட்பு படை வீரர்கள், ஒரு இன்ஜினியர், ஒரு பைலட் சேர்த்து 9 பேர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அவர்களை தேடி போலீஸ் ஹெலிகாப்டரில் இன்னொரு குழுவினர் சென்றனர். அப்போது மூன்று பேரின் உடலை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.
விபத்திற்கான காரணம், பயணித்தவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஜப்பான் சட்டப்படி மருத்துவ குழுவினர் உடலை உறுதி செய்த பின்னரே பலியானவர்கள் விவரம் குறித்து அறிவிக்கப்படும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்