Header Ads

கல்லறையில் தீ பற்றி எரியும் மரம்: காரணம் என்ன? அணைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்திய சம்பவம்

நடைபயிற்சி சென்ற போது தான் கண்ட அதிர்ச்சி காட்சியை வீடியோவாக பதிவுசெய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜிம் பொபஸ்ட். அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜிம் பொபஸ்ட். காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது கல்லறையில் தீ பற்றி எரியும் மரத்தினை வீடியோவாக எடுத்து பதிவேற்றியுள்ளார். 


இந்த வீடியோவில், மரம் ஒன்று வெடித்த நிலையில் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது. இது குறித்து அவர், காலை 5. 30 மணிக்கு நடைபயிற்சி செல்ல எழுந்தேன். ஆனால், கல்றையிலிருந்து புகை வருவதை பார்த்தேன் அதிர்ச்சியடைந்தேன். 


உடனே அருகே சென்று பார்த்த போது வெடித்த நிலையில் மரம் ஒன்று தீப்பற்றி எரிந்துக்கொண்டிருந்தது. உடனே, அதை வீடியோவாக பதிவு செய்தேன். மின்னல் தாக்கி மரம் தீப்பற்றி எரிகிறது என்பதை உணர்ந்தேன் ஆனால் கல்லறையில் இந்த சம்பவம் நடைபெற்றதால் இது பரபரப்பை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.