Header Ads

யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்கு சங்கு ! எச்சரிக்கை தகவல்

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலைக்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை வர வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாடெங்கிலும் அசாதாரண காலநிலைகள் காரணமாக பல தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக (டெங்கு, சளிசுரம்-இன்புளூவென்சா வகைக் காய்ச்சல் மற்றும் பல்வேறு சுவாசத் தொற்று) தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இதன் காரணமாக பொதுமக்கள் வைத்தியசாலை விடுதியில் இருக்கும் நோயாளரைப் பார்வையிடுவதற்கு வருகைத் தருவதை தவித்துக்கொள்ளுமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக கர்ப்பிணிகள் , குழந்தைகள் எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிவிடுவார்கள். இதனால் அவசியமற்ற வகையில் இவர்கள் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.