அகால மரணமான இந்த வாலிபரும் இவரது மனைவியும்! எப்படி இறந்தார்கள் என்று தெரியுமா ?
சென்னையைச் சேர்ந்த சர்வதேச கார்ப் பந்தய வீரருமான அஷ்வின் சுந்தரும் அவரது மனைவியும் நேற்றிரவு (17) இடம்பெற்ற விபத்தில் கொல்லப்பட்டனர்.
அஷ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி இருவரும் தமது காரில் நேற்றிரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
சென்னை எம்.ஆர்.சி. நகர் ஊடாக வந்தபோது கார் நிலை தடுமாறியது. மிதமான வேகத்தில் வந்துகொண்டிருந்த அந்தக் கார் நேரே வீதியோரம் நின்றிருந்த மரத்தில் மோதியது. மோதிய வேகத்திலேயே மளமளவெனத் தீப்பிடித்தது.
இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டபோதும்,
அவர்கள் வந்து சேர்வதற்குள் கார் முற்றிலும் தீக்கிரையானது.
தீ வேகமாகப் பரவியதால், வீதியோரம் நின்றிருந்தவர்களாலும் காப்பாற்ற முயற்சி எதுவும் எடுக்க முடியாமல் போனது.
முப்பத்து இரண்டு வயதே நிரம்பிய அஷ்வின், 2012 - 13ஆம் ஆண்டுக்கான ஃபோர்மியுலா 4 கார்ப் பந்தயத்தில் தேசிய அளவில் செம்பியன் பட்டம் வென்றவர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்