Header Ads

கனடாவில் நடந்த பயங்கரம்! பிளேனை கொண்டு பில்டிங்கில் அடித்து நொறுக்கல்

கட்டிடம் ஒன்றின் மீது இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், கனடாவின் மொன்றியல் மாகாணத்தில் சென். 


ப்ரூனோ நகரில் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது. ஒரு விமானம் கட்டடத்தின் மீது நேராக மோதியதாகவும், மற்றொரு விமானம் வாகனத் தரிப்பிடத்தின் அருகே விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானங்களிலும் தலா ஒருவர் மட்டுமே பயணித்திருந்தனர். 


கட்டடத்தில் மோதிய விமானத்தைச் செலுத்திய விமானி உயிரிழந்த அதேவேளை, மற்ற விமானத்தின் விமானி காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் தவிர, இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.