தனுஷின் உண்மையான அப்பா அம்மா மேலூரில்: டி.என்.ஏ டெஸ்டு எடுக்க வேண்டிய நிலை இவருக்கு
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி தாக்கல் செய்துள்ள வழக்கில், சான்றிதழில் குறிப்பிட்டுள்ளபடி அங்க அடையாளங்களை சோதிப்பதற்காக நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜரானார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது நடிகர் தனுஷுக்கு மரபணு பரிசோதனை நடத்தக்கோரி மேலூர் கதிரேசன்-மீனாட்சி தம்பதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால், இவ்வழக்கு வேகமெடுத்துள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர், மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஆஜராக கூறி உத்தரவிட்டிருந்தது.
இதன்படி ஆஜரான தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன் அறிக்கை நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷுக்கும், தனக்கும் மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்