இன்று முதல் நீங்கள் லண்டன் பொலிசாரிடம் மாட்டினால் சரி: அவ்வளவு தான் லைசன்ஸ் பறிபோகும்
இன்று முதல் பிரித்தானியாவில் மிகக் கடுமையான சட்டம் ஒன்று அமுலுக்கு வருகிறது. தமிழர்களே ஜாக்கிரதை. வாகனத்தை ஓட்டும் போது நீங்கள் மோபைல் போனை தொட்டால் போதும். உடனே 200 பவுண்டுகள் அபராதம் மற்றும் உங்கள் லைசன்சில் இருந்து 6 புள்ளிகள் வெட்டப்படும். மீதம் இருப்பது 6 புள்ளிகள் தான். இரண்டாம் தடவை மாட்டினால் சரி, உங்கள் லைசன்ஸ் காலி. 3 வருடம் கார் ஓட்ட முடியாத நிலை தோன்றும். மேலும் புதிதாக லைசன்ஸ் எடுத்தவர்கள்(2 வருடங்களுக்கு குறைவான) அவர்கள் மாட்டினால், உடனே லைசன் கான்சல் செய்யப்பட்டும்.
காரில் என்ன செய்யக் கூடாது.
கார் எஞ்சின் ஸ்டாடில் இருக்கும் போது, மற்றும் கார் நகரும் போதும் நீங்கள் மோபைல் போனை பாவிக்க முடியாது. காதில் உள்ள புளூ ரூத் வழியாக பேசலாம். ஆனால் மோபைல் போனை தொடக்கூடாது.
மோபைல் போனில் நவகேஷன் இருந்தால் கார் ஓடும் போது அதனை தொடவோ இல்லை வழியை மாற்றவோ பயன்படுத்த முடியாது
காரில் புளூ ரூத் இருந்தால் அதன் வழியாக பேசலாம். ஆனால் போனை தொட முடியாது.
போனில் உள்ள ஸ்பீக்கரில் பேச முடியாது
சிகப்பு சிக்னலில் நின்றால் கூட பேனை கையில் தொட முடியாது
எப்போது பாவிக்கலாம் ?
காரை கவனமாக ஒரு இடத்தில் பார்க் செய்துவிட்டு, எஞ்சினை ஆப் செய்து விட்டு தான் பாவிக்கவேண்டும். எஞ்சில் ஸ்டாடில் இருந்தால் நீங்கள் குற்றம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். அப்போது பொலிஸ் பிடித்தாலும் லைசன்சில் 6 புள்ளி போகும். இதுபோக மோட்டர் வேயில் மற்றும் சில இடங்களில், காரில் கமரா பொருத்தப்பட்டு அது வீதிகளில் உலா வரும். நீங்கள் மோபைல் போன் பேசினால் அது உடனே போட்டோ எடுத்துவிடும். பின்னர் படத்தோடு உங்களுக்கு கடிதம் வரும். எனவே இனி இந்த சிக்கலில் சிக்கவேண்டாம் தமிழர்களே.
வேலைசெய்யும் போது முதலாளி அடிக்கடி கால் செய்தால்
நீங்கள் வாகனம் ஓட்டும் வேளையில் உங்கள் முதலாளி அடிக்கடி போன் செய்து உங்களை தொந்தரவு செய்தால். இனி அவர் குற்றவாளியாக கருதப்படுவார். அவரது கம்பெனிக்கு அபராதம் விதிப்பதோடு, சிலவேளை கம்பெனியை இழுத்து மூடும் நிலை தோன்றலாம். மேலும் நீங்கள் வாகனத்தை ஓட்டும்போது , முதலாளி கால் அடித்தால் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. சாவகாசமாக பார்க் செய்துவிட்டு மீண்டும் நீங்கள் அழைத்து பேசுவது நல்லது.
வாகனத்தை ஓடும் போது மெசேஜ் வந்தால், அல்லது பேஸ் புக் ஸ்டேட்டஸ் அலேட் வந்தால் உடனே பார்க்கவேண்டாம். அதனை பொலிசார் கண்டாலே போதும்.
இதனை அனைத்து லண்டன் தமிழர்களோடும் பகிரவும்:
இப்படியான காரை கண்டால், உடனே அலேட் ஆகுங்கள்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்