Header Ads

லண்டன் உச்ச நீதிமன்றத்தை தாக்க நான் தயாராக இருந்தேன்: வேல்ஸ்சில் பிடிபட்ட தீவிரவாதி சொன்னார்



வேல்ஸில் வீடு ஒன்றை திடீரென முற்றுகையிட்ட பொலிசார் அங்கே வசித்த சமத்தா உல்லா என்னும் 33 வயது முஸ்லீம் நபரை கைது செய்தார்கள். சைபர் கிரைம் யூனிட்டில் இருந்து கிடைத்த தகவலுக்கு அமையவே அவர் கைதுசெய்யப்பட்டாலும் அவர் மீது குற்றஞ்சுமத்த போதுமான ஆதாரங்கள் பொலிசார் கைகளில் இல்லை. வீட்டை தேடிப்பார்த்தால் அங்கேயும் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை. இன் நிலையில் அவரது வீட்டில் பல பட்டன்கள் இருந்துள்ளது.

பொதுவாக ஷேர்ட்டுக்கு பாவிக்கப்படும் ஒரு வகையான பான்ஸ்சி பட்டன்கள் தான் அவை. அதனை அவர் உபயோகிக்கிறார் என்று சந்தேகம் கொண்ட பொலிசார் அதனையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். பின்னர் பகுப்பாய்வாளர்களிடம் அதனை கொடுத்து சோதனை செய்தால் அது பட்டன்கள் வடிவில் உள்ள யு.எஸ்.பி ஸ்டிக் என்பது தெரியவந்துள்ளது. அவை ஒவ்வொன்றிலும் பல கிகா-பைட் டேட்டா இருந்துள்ளது. அவை அனைத்துமே ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான தொடர்புடைய ஆவணங்கள் ஆகும்.

இதேவேளை ஓல்ட் பெயிலி என்று அழைக்கப்படும், லண்டம் மத்திய நகரப் பகுதியில் உள்ள குற்றவியல் உச்ச நீதிமன்றத்தை தாக்கும் திட்டம் அடங்கிய ஆவணங்களும் பொலிசாருக்கு சிக்கியது. தற்போது இவர் குற்றங்களை தாமே ஒப்புகோண்டார். இதனை அடுத்து அவருக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் தயாராகி வருவதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.