Header Ads

7 மில்லியன் பவுண்டுகள் கடத்தல்: சஞ்செஜ் என்னும் லண்டன் நபர் கைது பணத்துடன் எஸ்கேப்



லண்டனில் உள்ள ஹீத் ரூ விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சுலோ என்னும் இடத்தி வைத்து. பணம் பரிமாறும் வாகனம் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டது என்பது போக, அதில் வேலை செய்த 2 நபர்கள் 7 மில்லியன் பணத்தோடு எஸ்கேப் ஆகிவிட்டார்கள். கிரெடிட் சூசேஸ் என்னும் நிறுவனத்திற்கு, குறித்த வாகனத்தில் 7 மில்லியன் பவுண்டுகள் வருவது, சஞ்செஜ்(40) மற்றும் சிதிக்(33) ஆகிய இருவருக்கு மட்டுமே தெரியும்.

இவர்கள் கொடுத்த தகவலை அடுத்தே குறித்த வாகனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்த நபரும். பாதுகாப்புக்கு இருந்த 2 நபர்களும் தாம் ஓட்டிய வாகனத்தை கடத்திச் சென்று. அதில் உள்ள பணத்தை வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். வாகனம் அனாதையாக நடு தெருவில் நின்றுள்ளது. சில நிமிடத்தில் எல்லாம் பொலிசார் அங்கே வந்துவிட்டார்கள். இருப்பினும் பணத்தை கொள்ளை அடித்த நபர்களை பிடிக்க முடியவில்லை.

மிகவும் நுப்பமாக பிளான் போட்டு பெரும் பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள். உள்ளே உள்ள கறுப்பு பெட்டிகளில் சிலவேளைகளில் பெரும் பணம் இருக்கும். சில வேளைகளில் பணம் இருக்காது. ஆனால் அன்றைய தினம் 7 மில்லியன் பவுண்டுகள் இருப்பதை அவர்கள் எவ்வாறு அறிந்திருந்தார்கள் என்று சந்தேகப்பட்ட பொலிசார் 2வரை கைதுசெய்துள்ளார்கள். ஆனால் பணத்தை திருடிய நபர்கள் இன்னும் சிக்கவில்லை. தகவலை கொடுத்த நபர்களே சிக்கியுள்ளார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.