Header Ads

ஐ.எஸ் தீவிரவாதிகளால் மோசூல் நகரம் உச்சகட்ட போரில் மிதக்கிறது! அங்கே நடக்கும் கொடூர நிலைமையை பாருங்கள்!!

ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆக்கிரமிற்குட்பட்டுள்ள மொசூல் நகரை மீட்பதற்காக, உச்சகட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திலிருந்து சுமார் 360 கிலோமீற்றர் வடமேற்கேவுள்ள மொசூல் நகரில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுபாட்டில், சுமார் 15 இலட்சம் மக்கள் சிக்கியிருந்த நிலையில், தீவிரவிதிகளின் கொடுமைக்காரணமாக குறித்த பிராந்தியத்திலிருந்து இடம்பெயர்ந்தும் வந்தனர். மேலும் அமெரிக்க கூட்டுப்படையினரின் துணையுடன் ஈராக் இராணுவம் பல்வேறுபட்ட தாக்குதல் முயற்சிகள் பயனளிக்காதநிலையில், தம்மைப் பாதுகாத்து கொள்வதற்காக, 


சாதாரண பொதுமக்களை பணய கைதிகளாக தடுத்து வைத்துள்ளதோடு, வெளி மாவட்டங்களிருந்து மொசூல் நகரிற்க்கு கொண்டுவரப்படும் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய தேவையுடைய பொருட்களுக்கு தடையை ஏற்படுத்தியுள்ளனர். அதனால் அங்குள்ள மக்கள் பட்டினி மற்றும் கடும் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் கடந்த வருடம் இறுதியில் ஈராக்கிய பிரதமர் ஹைதர் அல் அபாடி, ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் நடத்தி, மொசூல் நகரை மீட்கும்படி உத்தரவொன்றை பிறப்பித்ததை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈராக்கிய கூட்டுப்படைகள் உச்சக்கட்ட தாக்குதல்களை நடத்தி வந்தனர். இதற்கு பதிலடியாக ஐ.எஸ், தீவிரவாதிகளும் அப்பாவி பொதுமக்களை கொன்று வந்ததோடு, பழவேற்காட்டை தற்கொலை தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தனர். 


இதன் ஒரு கட்டமாகவே கடந்த வாரம் பாக்தாத் நகரில் இடம் பெற்ற கார்குண்டு வெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டமை மற்றும் ஈராக்கிய இராணுவ உயரதிகாரி ஒருவர் உள்ளிட்ட 9 அரச படையினர் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலை தொடர்ந்து, மொசூலின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் மையங்களை குறிவைத்து, ஸ்னைப்பர் தாக்குதல்கள், 


மற்றும் அதிரடி விமானத்தாக்குதல்களை அமெரிக்க - ஈராக்கிய படைகள் மேற்கொண்டு வருகிறது. அத்தோடு தீவிரவாதிகளின் முக்கிய தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு, இனி எஞ்சியுள்ள சுமார் 2000 ஐ.எஸ் தீவிரவாதிகளை மாத்திரமே தாக்கவேண்டியுள்ளதாக, கூட்டு படையினர் அறிவித்துள்ளனர். இருப்பினும் குறித்தப் பிராந்தியத்திலுள்ள மக்கள், உச்சகட்ட பீதியில் தமது உயிரை தாக்குதலிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.