Header Ads

புலிகள் இல்லாதது அரசுக்கு பெரும் நெருக்கடி: இப்ப சுட்டால் யார் மீது பழியை போடுவது என்று ஏக்கம்



தமிழக மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் எவரின் மேல்  குற்றம் சுமத்துவது தொடர்பில் இலங்கை அரசு தலையைப் பிசைந்து கொள்வது வெளிப்படையாகவே தெரிகிறது. ஏனெனில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,  தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இலங்கை அரசிற்கு பாரிய தலையிடியைக் கொடுத்துள்ளது என்கிறார்கள்.

தமிழினப் படுகொலையை மூடி மறைக்க செய்த முயற்சி அனைத்தும் தோல்வி அடைந்து கொண்டிருக்கும் நிலையில் எல்லாவற்றையும் சரி செய்ய கால அவகாசம் தேவை என்று தமிழ் தலைவர்கள் என்று கூறிகொள்பவர்கள் மூலம் இரண்டு வருட கால அவகாசத்தை பெற்று தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கும் இவ்வேளையில் இம்மீனவர் விவகாரத்தை யார் தலையில் சுமத்துவது என்ற குழப்பத்தில் இந்தியா ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

முன்னர் என்னால் இலங்கை கடல் படை இந்திய மீனவர்கள் மீது சூடு நடத்திவிட்டு. அது நாங்கள் அல்ல விடுதலைப் புலிகள் என்று அவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவது வழக்கம். ஆனால் தற்போது இந்த பழியை யார் மேல் போடுவது ? இதற்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறியே ஆகவேண்டும் என்ற கடைப்பாடு தோன்றியுள்ளது என்கிறார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.