ஸ்ரீலங்கா இராணுவத்தினருடன் கைகுலுக்கும் லிபரல் எம்பி: அவர்களை அங்கிகரிப்பது போல உள்ளதே
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐநா பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், ராணுவத்தின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் திருப்பியளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் உச்ச நிலையில் இருக்கும் இக்காலகட்டத்தில் டொன்வலி கிழக்கு தொகுதியின் லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் யஸ்மின் ராதான்ஸி தலைமையில் ஒரு குழு ஸ்ரீலங்காவில் பயணம் செய்து, ஸ்ரீலங்கா இராணுவ முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து வருகிறது.
சமீபத்தில் இக்குழு யாழ்ப்பாணத்திற்கான பாதுகாப்புப் படைத் தலைவரான மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்காவை சந்தித்திருக்கிறது. இது குறித்த விபரங்களை இலங்கை இராணுவத்தினர் தமது இணையப் பக்கத்திலும் தந்திருக்கிறார்கள். இந்த பயணம் குறித்த பல குழப்பமான கேள்விகள் இப்போது தமிழ் மக்களிடம் சூழ்ந்திருக்கிறது. இலங்கையின் இனப்படுகொலையை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் நடவடிக்கைளை தமிழ் செயல்பாட்டாளர்கள் உறுதியுடன் துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்.
அவற்றிற்கு ஊறு விளைவிக்கத் தக்கவகையில் லிபரல் அரசாங்கத்திலுள்ள சில பகுதியினர் இயங்குகின்றனரா? அதற்கு கனடாவின் மேல் மட்டத்தினரும் துணைபோகின்றனரா என்ற குழப்பம் கனடா தமிழ் சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்