சற்று முன்: முகமூடி அணிந்த பிரிட்டன் பொலிசார் பேர்மிங்ஹாமில் ஒருவரை மடக்கிப் பிடித்த காட்சி
பிரித்தானியாவின் பாராளுமன்றம் முன்பாக காரை ஓட்டி வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி, பேர்மிங்ஹாம் நகரில் இருந்தே வந்தார் என்பதனை அறிந்த பொலிசார். தொடர்ந்து அன் நகரை தமது பூரண கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளார்கள். அதிலும் அன் நகரில் பல முஸ்லீம்கள் வாழ்ந்தும் வருகிறார்கள்.
இன் நிலையில் சற்று முன்னர் முகமூடி அணிந்த மற்றும் கனரக ஆயுதங்களை தாங்கிய பொலிசார், வீதியில் திடீரென ஒரு காரை மடக்கிப் பிடித்து அதில் பயணித்த ஒருவரை கைதுசெய்துள்ளார்கள். அவரை பொலிசார் அழைத்துச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
பேர்மிங்ஹாம் நகரில் தற்போது பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அன் நகர் இயல்பு நிலையில் இல்லை என்கிறார்கள்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்