Header Ads

என்னவொரு வரவேற்ப்பு! அதிகாரியின் கால் தண்ணீரில் பட விடாமல் தூக்கிச்சென்ற ஊர் மக்கள்!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்ட கலெக்டர் குர்மா ராவ். ஒரு கிராமத்திற்கு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அப்போது கிராமங்களின் உட்பகுதிகள் வரை சென்றார். 


இந்நிலையில் புர்திபாடா கிராமத்தின் எல்லைப் பகுதிக்கு சென்ற போது, அப்பகுதியில் சாலைகளில் நீர் நிரம்பி காணப்பட்டது. இதையடுத்து அவரை கிராமமக்கள் தூக்கிச் சென்று, நீரை கடந்து இறக்கி விட்டனர். அந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி குர்மா ராவ், தன்னை தூக்கிச் செல்ல கிராம மக்களிடம் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்ததாக கூறினார். 


ஆனால் அவர்கள் கேட்காமல் தன்னை தூக்கிச் சென்றதாக குர்மா குறிப்பிட்டார். கிராம மக்கள் ஆட்சியரை தூக்கிச் செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.