Header Ads

வீட்டை வெளியே பூட்டிகொண்டு 4 வருடங்களாக உள்ளே இருந்த தாய் மகள்! பரபரப்பு சம்பவம் நடந்தது எங்கே தெரியுமா ?

டெல்லியில் வீட்டைப் பூட்டிக்கொண்டு 4 ஆண்டுகளாக உள்ளே வாழ்ந்து வந்த தாய், மகளை போலீசார் மீட்டுள்ளனர். டெல்லியில் வீடு ஒன்றில் 2 பெண்கள் மிக நீண்ட நாட்களாக வீட்டை பூட்டிகொண்டு உள்ளே இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.


இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், முதல் மாடியில் உள்ளே பூட்டப்பட்டிருந்த அறைக் கதவை உடைத்துப் பார்த்தபோது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கலாவதி என்ற பெண்ணும், வயதான அவரது மகள் தீபாவும் இருந்தனர். இதையடுத்து, கீழ் வீட்டில் வசித்த கலாவதியின் மாமனார் மஹாவீர் மிஸ்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 


விசாரணையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் இருவரும் சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும், அதில் மனநலம் பாதிக்கப்பட்ட மருமகள் மற்றும் பேத்தி ஆகிய இருவரும் அறையை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக தெரிவித்தார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.