Header Ads

யாகூ சைபர் தாக்குதலில் ரசிய உளவு நிறுவன அதிகாரிகளின் ஊடுருவல் நடந்தது எப்படி! அதிரும் பின்னணி

யாகூ மீது நடத்தப்பட்ட மாபெரும் சைபர் தாக்குதலில் ரஷ்ய உளவு நிறுவன அதிகாரிகள் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. யாகூ சைபர் தாக்குதலில் ரஷ்ய உளவு நிறுவன அதிகாரிகள் 2 பேர் ஈடுபட்டதாக தகவல் வாஷிங்டன்: இணைய நிறுவனங்களில் ஒன்றான, யாகூ மின்னஞ்சல் சேவையும் வழங்கி வருகிறது.


முன்னதாக யாகூ மின்னஞ்சல்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியதாக தகவல்கள் வெளியாகின. தங்களின் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தும் 500 மில்லியன் பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக யாகூ நிறுவனமே தெரிவித்து இருந்தது. யாகூ (Yahoo) இணையத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும் 500 மில்லியன் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் வரலாற்றிலேயே மிகப்பெரும் சைபர் தாக்குதல் இதுவே என்றும் தெரிவித்துள்ளது. 


இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய புலானாய்வுத்துறை விசாரணை செய்து வருவதாகவும் யாகூ தெரிவித்திருந்தது. கணக்கு வைத்திருப்போரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, கடவுச்சொல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக யாகூ நிறுவனம் கூறியிருந்தது. இந்நிலையில், இந்த முக்கிய தாக்குதலுக்கு ரஷ்யாவின் எப்.எஸ்.பி. உளவு நிறுவனத்தை சேர்ந்த 2 பேரும், 2 ஹேக்கர்களும் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. இந்த குற்றச்செயலை ரஷ்ய உளவு நிறுவனத்தின் உதவியோடு அமெரிக்க உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது. 


இந்த தாக்குதலில் தொடர்புடைய டிமிட்ரி டோக்குசேவ் மற்றும் இகோர் சஸ்சின் ஆகிய இருவரும் ரஷ்யாவின் கேஜிபி நிறுவனத்தின் சார்பில் பணிபுரிந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் அமெரிக்கா மற்றும் மற்ற நாட்டு கணினிகளில் பரிமாறப்படும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல தகவல்களை திருட ஹேக்கர்களுக்கு பணம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளதாக அமெரிக்காவின் தற்போதைய உதவி அட்டர்னி ஜெனரல் மேரி மெக்கார்டு தெரிவித்துள்ளார். 


 மேலும் இந்த தாக்குதலை சரிசெய்ய அலெக்சி பெலன் மற்றும் கரிம் பரோடவ் என்ற இரு ஹேக்கர்களையும் அரசு நியமித்துள்ளது. சைபர் தாக்குதலில் இருந்து அமெரிக்கா மற்றும் ரஷ்ய அரசின் கணக்குகளை பாதுகாக்கும் முயற்சியில் இரு ஹேக்கர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் மெக்கார்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக சைபர் பாதுகாப்பு, 


முக்கிய தகவல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் தகவல்கள் பாதுகாக்கப்பட உள்ளன. மேலும் ரஷ்யாவின் பத்திரிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வர்த்தக நிதி நிறுவன அதிகாரிகளின் கணக்குகளில் உள்ள தகவல்களை பாதுகாக்கவும் முயற்சி ஹேக்கர்கள் செய்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்ட பாரடோவ் என்பவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.