Header Ads

உங்களுக்கு ஆபரேஷனா? மயக்கத்தில் இருக்கும்போது இப்படி நடக்கலாம்! (அவசியம் பார்க்கவேண்டிய வீடியோ)

ஆபரேஷனுக்காக மயக்க நிலையில் இருக்கும் ஒரு இளம்பெண் முன்பின் தெரியாத நபரிடம் மயக்க நிலையில் காதல் வசப்படும் காட்சி சமூக வலைத்தளங்களின் வாயிலாக தற்போது வைரலாக பரவி வருகிறது. வைரல் வீடியோ: உங்களுக்கு ஆபரேஷனா?: 


மயக்கத்தில் இந்த தவறு நடந்து விடாமல் பார்த்து கொள்ளுங்கள் நியூயார்க்: வட அமெரிக்காவில் கடந்த ஆண்டு கை அறுவை சிகிச்சை செய்வதற்காக ஒரு இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு, ஆபரேஷன் முடிந்த பின்னர் லூக் என்னும் ஆண் நர்ஸ் அவரை வார்டுக்கு கொண்டு வந்து படுக்க வைத்தார். மயக்கம் முழுமையாக தெளியாத நிலையில் மெல்ல கண்விழித்துப் பார்த்த அந்த இளம்பெண், 


ஆண் செவிலி லூக்கின் கவர்ச்சிகரமான முகத்தை கண்டு மதிமயங்கிய நிலையில் அவரிடம் குழறிக்குழறி காதல் மொழிகளை உதிர்க்க தொடங்குகிறார். லூக்கின் கைகளை பிடித்தவாறு தன்னுடைய அரை மயக்க விழிகளால் அவரது கண்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்து, ‘நான் உங்களை மிகவும் காதலிக்கிறேன். நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என்று மயக்கம் ஏற்றும் காதல் வசனங்களை மழலை மொழியில் உதிர்க்கிறார். 


ஆனால், நாம் இப்போதுதானே முதன்முறையாக சந்திக்கிறோம்.., என்று கேட்கும் லூக்கின் ஜோக்கை பெரிதுபடுத்தாத அந்த இளம்பெண், ‘எங்கே உங்கள் முகத்தை என் கைகளால் தொட்டு உணர்ந்துப் பார்க்க துடிக்கிறேன்’ என்றவாறு அவரது தாடியை தடவிப் பார்த்து, குழந்தைத்தனமாக ரசித்து சிரிக்கிறார். இந்த காட்சியை அப்போது ஆஸ்பத்திரியில் இருந்த யாரோ ஒருவர் படம் பிடித்த வேளையில் நிச்சயமாக இது வைரல் ஆகப் போகிறது என்று லூக் கூறும் காட்சியுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. 


கடந்த ஆண்டு அக்டோபர் மாதவாக்கில் பல்வேறு நபர்களால் சமூக வலைத்தளங்களில் தனித்தனியாக பதிவாகி, கோடிக்கணக்கான பார்வையாளர்களை இந்த வீடியோ வைரலாகி, கவர்ந்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் வாழும் ஹிப் ஹாப் பாடகர் ஜெர்சி டெமிக் தற்போது அந்த மயக்க நிலையில் காதல் மொழிகளை உதிர்க்கும் அந்த வீடியோவை மீண்டும் மறுபதிவு செய்துள்ளார். 


இந்த ஆண்டிலும் பல கோடி பேரை மகிழ்விக்கும் இலக்குடன் தற்போது மீண்டும் இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. வட அமெரிக்காவின் எந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் அந்த இளம்பெண் மற்றும் ஆண் செவிலி லூக் தொடர்பாக பார்வையாளர்கள் பல்வேறு விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்தப் பெண்ணை குறை சொல்ல முடியாது, ஏனென்றால் லூக் அவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார் என்று ஒருவரும், 


அவரிடம் எனது காதலை வெளிப்படுத்த எனக்கு மயக்க மருந்தே தேவையில்லை என்று இன்னொருவரும், ‘அனஸ்தெஸியா’ (மயக்க மருந்து) இப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதை பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருக்கிறது. எனக்கு இதுபோன்ற அனுபவம் நேர்ந்திருந்தால் அதன் பிறகு நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன் என்று ஒரு பெண்ணும் ஹிப் ஹாப் பாடகர் ஜெர்சி டெமிக்கின் ‘கமென்ட்’ பகுதியில் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வைரல் வீடியோ.., உங்கள் பார்வைக்கும்..,.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.