Header Ads

ட்விட்டரில் கிண்டல்.. போலீஸுக்கு அடித்தது ஜாக்பாட்!

மகாராஷ்டிர மாநிலத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜோகாவாட். 180 கிலோ எடையுடன் உடல் பருமனாக இருக்கும் இவரின் புகைப்படத்தை பிரபல எழுத்தாளர் ஷோபா டே தந்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, மும்பையில் உள்ள போலீஸார் உள்ளூர் தேர்தல்களுக்காக பலமான பாதுகாப்பிற்கு திட்டமிட்டுள்ளனர் என்று கிண்டல் செய்யும் விதமாக கருத்துக்களை பதிவிட்டிருந்தார். 


அந்தப்பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. மேலும், எதிர்பாராத விளைவாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையானது அந்த செய்தியைப்பார்த்துவிட்டு உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை அந்த போலீஸ்காரரருக்கு அளிக்க முன்வந்தது. அறுவை சிகிச்சை முடிந்து கடந்த திங்கட்கிழமையன்று மருத்துவமனையைவிட்டு வெளியேறிய ஆய்வாளர், 


தன்னை பிரபலமாக்கிய அந்த எழுத்தாளர் ஷோபா டேக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையை தொடர்ந்து ஜோகாவாட் நலமாக இருப்பதாகவும், அடுத்த ஆண்டிற்குள் சுமார் 80 கிலோ எடையை அவரால் இழக்க முடியும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.