Header Ads

அமெரிக்க மசூதிகளுக்கு செல்பவர்களுக்கு பேராபத்து! அங்கே நடக்கபோவது இதுதான்

அமெரிக்காவின் 5 முக்கிய மசூதிகளுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. அதில் ஒரு மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி மாகாணத்திலுள்ள லெக்ஸிங்டன் மசூதிக்கு பச்சை நிற அட்டை ஒன்று வந்தது. 


அதில், " விரைவில் இந்த மசூதியில் வெடிகுண்டு வைக்கப்படும்" என்று எழுதியிருந்தது. மேலும், மற்ற 4 மசூதிகளுக்கு மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளன. " உங்களுக்கும், உங்கள் இனத்திற்குமான மரணம் காத்துக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும், மார்ச் 15ம் தேதி அமெரிக்காவிலிருக்கும் இஸ்லாமியர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அந்த மிரட்டல் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்த மசூதிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.