வைத்தியர் வேடத்தில் வந்த ஐஎஸ் தீவிரவாதிகளால் 38 பேர் பலி : ஆப்கானிஸ்தானில் சம்பவம்..!
ஆப்கானிஸ்தானிலுள்ள இராணுவ வைத்தியசாலையில், தீவிரவாதிகள் வைத்தியர்களை போல உடை அணிந்து சென்று தாக்குதல் நடத்தியதால் 38 பேர் இறந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தலை நகர் காபூலிலுள்ள,
முஹம்மது தாவுத் கான் இராணுவ வைத்தியசாலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் வைத்தியர்கள் உடையில் வந்தவர்களால் நிலைகுலைந்த வைத்தியசாலை இராணுவத்தினர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீது, தீவிரவாதிகள் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு அந்நாட்டு தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேலதிக பாதுகாப்பு படையினரின் அதிரடியான தாக்குதலை தொடர்ந்து நிலைமை கட்டு படிர்ட்க்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதே பாணியில் கடந்த நவம்பர் மதம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 30 பேர் வரை கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்