தங்க பிளேட் போட்ட பிளேன்: 200 யானை எடை கொண்ட பொருட்களோடு சவுதி அரசர் வந்தார்
சவுதி அரேபிய அரசர் 8 நாள் உத்தியோக பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு, இந்தோனேசியா சென்றுள்ளார். சுமார் 50 வருடங்களுக்கு பின்னர் சவுதி மன்னர் ஒருவர் இந்தோனேசியா செல்வது இதுவே முதல் தடவை ஆகும். தங்க பிளேட் பொருத்தப்பட்ட ரட்டை தட்டு கொண்ட தனி விமானத்தில் இவர் வந்திறங்கியுள்ளார். இவருக்கு சேவை புரிய சுமார் 1,000 பேர் ஏற்கனவே வந்துவிட்டார்கள். அது போக 8,000 ராஜாங்க அதிகாரிகள் அதில் 20 இளவரசர்களும் அடங்குகிறார்கள். இவர் மொத்தமாக கொண்டுவந்த பொருட்களின் எடை 500 தொன் என்கிறார்கள்.
அப்படி என்றால் அது 200 யானைகளுக்கு சமனான எடை ஆகும். இதில் தங்கத்தினால் ஆன றோல்ஸ் றொயிஸ் கார்கள், அடங்கும். எங்கு சென்றாலும் அமர கூடிய தங்கத்தினால் ஆன கதிரைகளும் இதில் அடங்குகிறது. பெரும் எடுப்பில இவர் இந்தோனேசியா சென்றுள்ளார். உலகில் உள்ள அரச குடும்ப பில்லியன்ர்களில், சவுதி அரசர் 3ம் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்புகள், சுமார் 19 பில்லியன் என்று கூறப்படுகிறது. டாப் 10 பணக்கார வரிசையில் , பிரித்தானிய ராச குடும்பம் இல்லை என்பது பலருக்கு ஆச்சரியத்தை தரலாம்.
எல்லாம் ஆயில்(எண்ணை) செய்யும் விளையாட்டு. ஆனால் வெகு சீக்கிரத்தில் இந்த எண்ணை வழம் குறைந்து வற்றிவிடும். அப்போது இவர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாக இருக்கும். இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுவார்கள். இவர்களை போல பல ஜாம்பவான்களை இந்த உலகம் பார்த்துவிட்டது.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்