Header Ads

இலங்கை வடக்கில் விசித்திர தொற்றுநோய் ! அனைத்து மக்களும் கடும் பீதியில்! எப்படி பரவுகிறது ?

வட மாகாணத்தில் இன்ப்ளுவென்சா எச்.வன்.என்.வன் நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 400 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 


கிளிநொச்சி மருத்துவமனையில் மாத்திரம் 244 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 80 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுபவர்களின் இரத்த மாதிரி, கொழும்பு மருத்துவ பரிசோதனை நிறுவனத்திற்கு அனுப்பபட்டுள்ளது. 


அதில் 37 பேருக்கு இன்ப்ளுவென்சா எச்.வன்.என்.வன் நோய் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.